செய்திகள் தமிழ் தொடர்புகள்
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
சென்னை:
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரியும், முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் பகுதி மீனவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை பட்டாவுடன் மீண்டும் ஒப்படைக்க கோரியும் முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் மீனவர் பஞ்சாயத்து சபை, முள்ளிமாநகர் மீனவர் பஞ்சாயத்து சபை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், பட்டினப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
எண்ணூர் முதல் கோவளம் குப்பம் வரை உள்ள பல்வேறு மீனவ பஞ்சாயத்து சபைகள், மீனவர் அமைப்புகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் மயிலாப்பூர் பகுதி அனைத்து மீனவ கிராம சபையின் ஒருங்கிணைப்பாளர் பாரதி கூறியதாவது:
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அரசாணையில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் 4592, 4593-களில் உள்ள 25 ஏக்கர் காலியிடமானது, முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் மீனவமக்களின் பூர்வீக நிலமாகும்.
கடந்த 1957-ம் ஆண்டு மீனவர்களுக்காக போடப்பட்ட அரசாணை மூலம் அப்பகுதி பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்தி, குடிசைப் பகுதி என அறிவித்தது. பின்னர், அங்கிருந்த மீனவர்களுக்கு 875 சதுர அடியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என அரசு வாக்குறுதி அளித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது.
ஆனால், அந்த வாக்குறுதியை மீறி 1+1 என்ற வீதத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டன. அதை ஏற்க மறுத்த மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, கடலுக்கும் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கும் இடைப்பட்ட புறம்போக்கு நிலத்தில் அரசு குடியேற்றியது.
இதனால் சிறு மழை, வெள்ளம் வந்தாலும் தாழ்வான அப்பகுதியில் நீர் புகுந்து மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த (சர்வே எண் 4592, 4593) எங்கள் சொந்த நிலத்திலேயே எங்களுக்கு மீண்டும் குடியிருப்புகளை அமைத்துத் தர வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஆனால், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் போகிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதி மீனவர்களையும் எங்களால் ஒன்றிணைக்க முடியும்.
மாநில அளவிலான மீனவர் போராட்டமாக இது மாறுவதற்கு முன், புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அந்த இடத்தை பூர்வீகமாகக் கொண்ட மீனவர்களுக்கே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்கவிழா: மதுரையில் முதல்வர் விஜய்
September 23, 2026, 3:06 pm
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் எழுதிய கடிதம் வெளியானது
September 22, 2026, 3:23 pm
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
September 21, 2026, 10:34 pm
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
