செய்திகள் விளையாட்டு
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் கிரிக்கெட் மட்டைகள் திருடப்பட்டுள்ளன; பிரதமர் மோடியிடம் புகார் தரட்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தீபக்
பாட்னா:
இந்திய அணியின் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவரும் தீபக் சாஹர், உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் சாஸ்திரிபுரம் திடலில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருடைய பிளேயர் எடிசன் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான மூன்று மட்டைகளை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தீபக் சாஹர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோ பதிவில், “நேற்று மாலை இங்கிருந்து 3 பேட்டுகள் திருடப்பட்டுவிட்டன. நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவை மிகவும் நல்ல பேட்டுகள்.
அவற்றைத் திருடியவருக்கு அவை எவ்வளவு விலை உயர்ந்தவை என்பதுகூடத் தெரியாது. கிரிக்கெட் மட்டைகளைத் திருடியவர்களுக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியாது. அவர் அதை யாரிடமாவது விற்றுவிடுவார் அல்லது டென்னிஸ் பந்தில் விளையாடி வீணடித்துவிடுவார்.
இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? போலீசில் புகார் அளிக்கவா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஜி அல்லது பிரதமர் மோடிஜியிடம் செல்லவா? அல்லது திருடனுக்கு நல்ல புத்தி கொடுக்க சொல்லி நேரடியாகக் கடவுளிடமே வேண்டிக்கொள்ளவா?” என்று கேட்டுள்ளார் தீபக் சாஹர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 11:23 am
டென்மார்க்கிடம் படுதோல்வி: போர்த்துகல் அணிக்கு ரொனால்டோ ரசிகர்கள் கடும் கண்டனம்
November 16, 2026, 11:08 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் வெற்றி
November 13, 2026, 3:51 pm
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன்: அரையிறுதிக்கு முன்னேறி AARON TAI- YAP ROY KING அசத்தல்
November 13, 2026, 11:22 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
November 12, 2026, 11:10 pm
மென்செஸ்டர் யுனைடெட் கேரிக்கைப் பணி நீக்கம் செய்தது
November 12, 2026, 9:07 am
இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் கிளையன் எம்பாப்பே விளையாட மாட்டார்
November 12, 2026, 9:06 am
மென்செஸ்டர் யுனைடெட், போச்சென்டினோ இடையே வாய்மொழி ஒப்பந்தம் எட்டப்பட்டது
November 11, 2026, 11:11 am
இன்பான்டினோவுக்கு சவால் விட வேகா தயார்
November 11, 2026, 10:54 am
போச்சென்டினோவை ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்
November 10, 2026, 9:49 am
