நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்

நகோயா:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் சீன வீராங்கனையை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நீரு தண்டா, இப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான தனிநபர் டிராப் ஷூட்டிங், இன்று நடைபெற்றது.

இதில் இந்தியாவின் நீரு தண்டா, 30க்கு 28 என்ற கணக்கில் மிகச் சிறந்த துல்லியத்துடன் இலக்கை தாக்கி ஈர்க்கக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன்மூலம், பெண்களுக்கான தனிநபர் டிராப் ஷூட்டிங் இறுதிப்போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார்.

30 வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே தவறவிட்ட நீரு தண்டா, 28 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். சீனாவின் சுன் யுனோங், 30க்கு 26 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார். குவைத்தின் ஹஜார் அப்துல்மாலிக் 30க்கு 21 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset