நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

12 வயது சிறுவன் சொத்துக்களை அறிவிப்பதன் காரணத்தை எம்ஏசிசி தெளிவுபடுத்த வேண்டும்: கணபதிராவ்

கிள்ளான்:

பெரியவர்களின் நிதி விவகாரங்கள் தொடர்பான சொத்து அறிவிப்புச் செயல்பாட்டில் 12 வயது சிறுவனை  நேரடியாக ஈடுபடுத்துவதன் காரணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பது, பணப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது, சட்டவிரோதமாகப் பெறப்பட்டிருக்கக்கூடிய சொத்துக்களை அடையாளம் காண்பது போன்ற எம்ஏசிசியின் முயற்சிகளுக்கு நிச்சயமாக ஆதரவளிக்கப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் கூறினார்.

இருப்பினும், விசாரணைகளை நடத்துவதில் உள்ள கண்டிப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு, பொருத்தம் ஆகிய கொள்கைகளைப் புறக்கணிக்கக் கூடாது.

பெரியவர்கள் மேற்கொள்ளும் நிதி விவகாரங்கள், பரிவர்த்தனைகள் தொடர்பான சொத்து அறிவிப்புச் செயல்பாட்டில், வெறும் 12 வயது மட்டுமே ஆன சிறுவனை ஏன் நேரடியாக ஈடுபடுத்த வேண்டும் என்பதே கேள்வி.

சிறுவனின் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், சட்டப்படி அந்தச் சொத்துக்களை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை நான் மறுக்கவில்லை.

இருப்பினும், ஒரு குழந்தையின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சொத்துக்களை விசாரிப்பது என்பது, பெரியவர்களின் நிதி விவகாரங்களை விளக்கும் பொறுப்பை அக்குழந்தையின் மீதே சுமத்துவதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயமாகும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset