செய்திகள் விளையாட்டு
இந்திய இளைஞர்கள் காற்பந்து துறையில் மிளிர வேண்டும்: டத்தோ K.இராஜகோபால் வலியுறுத்தல்
பத்துகாஜா:
நாட்டின் காற்பந்து துறையில் இந்திய இளைஞர்கள் மிளிர வேண்டும் என்றும் விளையாட்டு துறையில் கட்டொழுங்கும் ஆர்வமும் அவசியம் என்று ஹரிமாவ் மலாயா அணியின் முன்னாள் தலைமை பயிற்றுநர் டத்தோ K..இராஜகோபால் வலியுறுத்தினார்

காற்பந்து சகாப்தங்களான சந்தோக் சிங், ஆறுமுகம், சோ சீன் அன் போன்ற தலைசிறந்த ஆட்டக்காரர்கள் நாட்டிற்காக விளையாடியுள்ளனர். அவர்களின் பெயர்கள் நிலைத்திருப்பதற்கு அளப்பரிய பங்களிப்பே காரணம் என்று அவர் தெரிவித்தார்.

பத்துகாஜாவில் KELAB BOLA PERKASA BEMBAN மற்றும் KELAB REKREASI CEMERLANG CHANGKAT BATU GAJAH விளையாட்டு அமைப்புகள் இணைந்து டத்தோ கே. இராஜகோபால் அவர்களின் தன்முனைப்பு உரை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துகாஜாவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது
இதில் KELAB BOLA PERKASA BEMBAN விளையாட்டு அமைப்பைச் சேர்ந்த இளம் இந்திய விளையாட்டாளர்கள் கலந்து கொண்டு அவரின் தன்முனைப்பு உரையைக் கேட்டனர்.

MIMPI KEJAYAAN DALAM BIDANG BOLA SEPAK எனும் கருப்பொருளை முன்னிருத்தி டத்தோ K..இராஜகோபால் தன்முனைப்பு உரையை எழுச்சியுடன் வழங்கி இளைம் விளையாட்டாளர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அருள்மிகு ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர், KELAB BOLA PERKASA BEMBAN-இன் தலைவர் முரளிதரன் கேசவன், மற்றும் KELAB REKREASI CEMERLANG CHANGKAT BATU GAJAH-இன் தலைவர் ரவி முனியாண்டி அவர்களுடன் உயர்மட்ட, செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட இந்திய இளம் விளையாட்டாளர்களுக்கு நற்சான்றிதழ்களும் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 10:24 am
போர்த்துகல் அணிக்காக தேவைப்பட்டால் மட்டுமே விளையாடுவேன்: ரொனால்டோ அதிரடி
September 29, 2026, 10:24 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 27, 2026, 10:49 pm
மலேசியாவின் ஆறு தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை சிவசங்கரி நிறைவு செய்தார்
September 27, 2026, 6:33 pm
ஆசிய விளையாட்டு போட்டி: முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியதால் வெற்றியை இழந்த இந்திய ஸ்குவாஷ் இணை
September 27, 2026, 8:34 am
ஹரிமாவ் மலாயாவின் செயல் திறனை ஃபிஃபா தலைவர் பாராட்டினார்
September 27, 2026, 8:30 am
ஐரோப்பிய தேசிய லீக்: கிண்ணம் ஸ்பெயின் வெற்றி
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
