செய்திகள் விளையாட்டு
போர்த்துகல் அணிக்காக தேவைப்பட்டால் மட்டுமே விளையாடுவேன்: ரொனால்டோ அதிரடி
லிஸ்பன்:
போர்த்துகல் அணிக்குத் தனது பங்களிப்பு தேவைப்படும் வரை மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் விளையாடப் போவதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 பிபா உலகக் கிண்ண தொடரில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணி கிண்ணத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
அதற்கேற்ப லீக் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணி, 'ரவுண்ட் ஆப் 16' சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இதையடுத்து ரொனால்டோவின் எதிர்காலம் குறித்து கேள்விகள் அதிகரித்திருந்தன.
அதற்கேற்ப, இதுவே தனது கடைசி உலகக் கிண்ண தொடராக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், சர்வதேசக் கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் கிளப் அணிகளுக்காகத் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது போர்த்துகல் அணிக்காக ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண போட்டியில் விளையாடி வருகிறார்.
மேலும் போர்த்துகல் அணிக்கு தனது பங்களிப்பு தேவைப்படும் வரை மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாடப் போவதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
போர்த்துகல் மக்கள் என் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர்,
அதனால்தான் நான் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
எனது ஆட்டத்தைப் பார்த்தாலே நான் இன்னும் சிறப்பாகச் செயல்படுகிறேன் என்பது தெரியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 11:09 am
இந்திய இளைஞர்கள் காற்பந்து துறையில் மிளிர வேண்டும்: டத்தோ K.இராஜகோபால் வலியுறுத்தல்
September 29, 2026, 10:24 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 27, 2026, 10:49 pm
மலேசியாவின் ஆறு தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை சிவசங்கரி நிறைவு செய்தார்
September 27, 2026, 6:33 pm
ஆசிய விளையாட்டு போட்டி: முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியதால் வெற்றியை இழந்த இந்திய ஸ்குவாஷ் இணை
September 27, 2026, 8:34 am
ஹரிமாவ் மலாயாவின் செயல் திறனை ஃபிஃபா தலைவர் பாராட்டினார்
September 27, 2026, 8:30 am
ஐரோப்பிய தேசிய லீக்: கிண்ணம் ஸ்பெயின் வெற்றி
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
