நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசிய விளையாட்டு போட்டி: முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியதால் வெற்றியை இழந்த இந்திய ஸ்குவாஷ் இணை

நயாகா:

விளையாட்டு உலகில் எத்தனையோ விசித்திரமான தோல்விகளையும், கடைசி நிமிடத் திருப்புமுனைகளையும் நாம் பார்த்திருப்போம். 

ஆனால், 'முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடியதால்' தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்த கதையை ஸ்குவாஷ் அரங்கம் ஜப்பானில் கண்டிருக்கிறது.

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சினப்பா, வேலவன் செந்தில்குமார் இணை, ஹாங்காங் அணியை எதிர்கொண்டது.

10-10 என்ற உச்சக்கட்ட பதற்ற நிலையில், வெற்றிப் புள்ளியைப் பெறுவதற்காக இரு அணிகளும் மிகத் தீவிரமாக மோதின.

ஒரு கடினமான ஷாட்டை அடித்த செந்தில்குமார், பந்து எதிரணியினரால் திருப்ப முடியாதபடி சென்றுவிட்டது என்றும், இந்தியா அந்தப் புள்ளியை பெற்று தந்துவிட்டது என்றும் கருதி, உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார். 

ஆனால், அங்கேதான் விதிமுறையின் வடிவில் ஒரு பெரிய திருப்பம் காத்திருந்தது.

பந்து ஆட்டத்தில் இருந்தபோதே வெற்றியை முன்கூட்டியே கொண்டாடத் தொடங்கியதால், 'எதிரணி வீரர்களின் கவனம் சிதறியது' (Distraction) என்று போட்டியின் நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார்.

போட்டி சமமாகியிருந்த நிலையில், அடுத்து ஒரு புள்ளி எடுக்கும் அணியே வெற்றியாளர் என்ற 'கோல்டன் டைபிரேக்கர்' முறையில் ஹாங்காங் இணை நிதானமாக விளையாடி 11-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய இணையால் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியாமல் போனது. அவர்கள் வெண்கலப் பதக்கத்தோடு திருப்தியடைய வேண்டியதாயிற்று.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset