செய்திகள் விளையாட்டு
ஹரிமாவ் மலாயாவின் செயல் திறனை ஃபிஃபா தலைவர் பாராட்டினார்
கோலாலம்பூர்:
ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, 2026 ஃபிஃபா ஆசியான் கிண்ண போட்டியை ஒரு சிறப்பான வெற்றியுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஹரிமாவ் மலாயா அணிக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கு ஊக்கமளித்தார்.
இன்ஃபான்டினோ, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவின் மூலம்,
ஏ பிரிவுப் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய மலேசியா, இந்தோனேசியா அணிகளை பாராட்டினார்.
தொடக்க ஆட்டத்தில், ஆரிஃப் ஐமன் ஹனாபியின் இரண்டு கோல்கள், பெர்க்சன் டா சில்வாவின் ஒரு கோல் ஆகியவற்றின் உதவியால், மலேசியா வங்காளதேசத்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதைவிட இனிமையான விஷயம் என்னவென்றால், அனைத்துலக அரங்கில் ஹரிமாவ் மலாயா அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து பெர்க்சன் அனைவரையும் கவர்ந்தார்.
இதைத் தொடர்ந்து பிபா, ஆசியான் கிண்ண போட்டி பயணங்களை அற்புதமான வெற்றிகளுடன் தொடங்கிய இந்தோனேசியா, மலேசியாவிற்கு வாழ்த்துகள் என்று இன்ஃபான்டினோ கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 8:30 am
ஐரோப்பிய தேசிய லீக்: கிண்ணம் ஸ்பெயின் வெற்றி
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 25, 2026, 10:29 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
September 24, 2026, 9:50 am
1000 கோல்களை இலக்காக கொண்டுள்ள ரொனால்டோவுக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை
September 24, 2026, 9:46 am
ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு குறிவைக்கும் ஷாமலாராணி
September 23, 2026, 3:57 pm
