செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக்: கிண்ணம் ஸ்பெயின் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியினர் வெற்றி பெற்றனர்.
வெம்பிளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் இங்கிலாந்து அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
உலக சாம்பியனான ஸ்பெயின் அணியின் வெற்றி கோல்களை லெமனே யமால், அலெக்ஸ் பாயனா, மைக்கல் ஓசார்ஷபேல் ஆகியோர் அடித்தனர்.
சொந்த அரங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் சுவிட்ஸர்லாந்து, சுலோவாக்கியா, அல்பேனியா, பின்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 8:34 am
ஹரிமாவ் மலாயாவின் செயல் திறனை ஃபிஃபா தலைவர் பாராட்டினார்
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 25, 2026, 10:29 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
September 24, 2026, 9:50 am
1000 கோல்களை இலக்காக கொண்டுள்ள ரொனால்டோவுக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை
September 24, 2026, 9:46 am
ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு குறிவைக்கும் ஷாமலாராணி
September 23, 2026, 3:57 pm
