செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: முந்தைய அரசாங்கத்தின் மீது பழிப்போடாதீர்
பெட்டாலிங் ஜெயா:
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பான விவகாரத்தில் முந்தைய அரசாங்கத்தின் மீது பழிப்போட வேண்டாம் என்று மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமிற்கு அமினுடின் ஹருன் கூறினார்.
1959ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு சட்டத்தை தனது மாநில அரசாங்கம் மீறப்பட்டதா ? எப்போது மீறப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முந்தைய அரசாங்கம் குற்றம் புரிந்தது என்றால் அதற்கான சாட்சியத்தை வழங்குமாறு அமினுடின் ஹருன் கேட்டுக்கொண்டார்
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நெகிரி செம்பிலான் ஆட்சியாளாரை நீக்கும் பிரகடனத்தில் ஏன் இஸ்மாயில் லாசிம் கையெழுத்திட்டார் என்பதை அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமினுடின் தெரிவித்தார்
ஏப்ரல் 19 ஆவணத்தில் தாம் மந்திரி பெசாராக இருந்தபோது கையெழுத்து இட மறுத்துவிட்டேன். காரணம் இந்த விவகாரம் அரசியலமைப்பு நெருக்கடியாக தாம் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்
முன்னதாக, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நெகிரி செம்பிலானில் நிகழும் நெருக்கடிக்கு முந்தைய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தான் காரணம் என்று மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் குற்றஞ்சாட்டியிட்ருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 4:59 pm
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அக்டோபர் 7ஆம் தேதி மலேசிய தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டம்
September 25, 2026, 4:02 pm
தேசியக் கூட்டணி இடைநீக்கம்; தேசிய முன்னணியின் பலத்தைப் பாதிக்காது: டத்தோஸ்ரீ சரவணன்
September 25, 2026, 2:13 pm
நஜிப் ரசாக்கின் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு: அதிகாரப்பூர்வ கடிதம் இன்னும் கிடைக்கவில்லை
September 25, 2026, 2:12 pm
நெகிரி செம்பிலான் மாநில விவகாரத்தில் சட்டத்துறை அலுவலகம், பிரதமர் தலையிட வேண்டாம்
September 25, 2026, 12:33 pm
