நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில விவகாரத்தில் சட்டத்துறை அலுவலகம், பிரதமர் தலையிட வேண்டாம்

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் மாநில ஏற்பட்டுள்ள மாநில அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பில் AGC எனப்படும் தேசிய சட்ட அலுவலகமும் பிரதமரும் தலையிட வேண்டாம் என்று  UNDANG YANG EMPAT மற்றும் TUNKU BESAR TAMPIN தலைவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர் 

குறிப்பாக, மாநிலத்தின் அரசமைப்பு அதிகாரங்கள் தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளரை நியமிக்கும் அல்லது நீக்கும் சிறப்பு அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உள்ளதாக அவர்கள் கூறினர். 

1959 நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பு சட்டத்தின் விதி 10 மற்றும் 11ஆவது பிரிவுகள் தங்களுக்கு இந்த சிறப்பு அதிகாரத்தை வழங்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்

மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் மத்திய அரசாங்கத்தின் முகமைகள் மூலம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் அன்வாருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தனர். 

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் மாநிலத்தின் ஆட்சியாளரை நீக்கும் அதிகாரம் கிடையாது என்றும், அந்த அதிகாரம் UNDANG YANG EMPAT  அமைப்பிற்கு மட்டுமே உண்டு என்றும் தெளிவுபடுத்தினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset