செய்திகள் மலேசியா
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேராளர் மாநாட்டை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் தொடக்கி வைப்பார்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
கோலாலம்பூர்:
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேராளர் மாநாட்டை துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தொடக்கி வைப்பார்.
அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை தெரிவித்தார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
18ஆவது ஆண்டாக இம்மாநாடு அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் (PWTC) நடைபெறவுள்ளது.
மாநாட்டை டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தொடக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
இம்மாநாட்டில் பல கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்படவுள்ளது.
அதே வேளையில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, அரசியல் பாதை, அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் அரசியல் பயணத்தில் இதுவொரு முக்கிய அங்கமாக இம்மாநாடு அமையவுள்ளது.
குறிப்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தின் மீதான அதிருப்திகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 12:33 pm
நெகிரி செம்பிலான் பாரம்பரிய நெருக்கடி தொடர்பாக ராய்ஸ் யாத்திம் மீது தேசத் நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 25, 2026, 12:06 pm
வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்: MCMC மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது
September 25, 2026, 12:03 pm
நெகிரி செம்பிலானின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம்: AGC விளக்கம் அளிக்க பாஸ் கட்சி கோரிக்கை
September 25, 2026, 11:10 am
சரவாக்கில் உள்ள 4 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 25, 2026, 11:02 am
நஜிப்பின் பொது மன்னிப்பு; மடானி அரசின் பதவிக்காலம் முடியும் வரையிலான சேவையைப் பாதிக்காது: ஃபஹ்மி
September 25, 2026, 10:52 am
காணாமல் போன மகள் வழக்கை இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்
September 25, 2026, 10:45 am
