செய்திகள் மலேசியா
நஜிப் ரசாக்கின் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு: அதிகாரப்பூர்வ கடிதம் இன்னும் கிடைக்கவில்லை
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு, வீட்டுக்காவல் தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் தங்கள் தரப்புக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா கூறினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பொதுமன்னிப்பு வழங்கி ஒரு வாரம் வாரம் கடந்தும், சிறைத்துறைக்கோ அல்லது நஜிப்புக்கோ எந்தவித தகவலும் வரவில்லை என்று அவர் கூறினார்.
இந்த தாமதத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், இது வழக்கத்திற்கு மாறானதாக இருப்பதாகவும் வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிபந்தனை மன்னிப்புடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதையும் அவர்கள் அறிய விரும்புகின்றனர்.
நிபந்தனை மன்னிப்பின் விதிகளின்படி நஜிப் உடனடியாக ஐம்பது மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை செலுத்த முடியுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஷஃபி, தனது வாடிக்கையாளரால் உடனடியாக அந்தத் தொகையை செலுத்த இயலாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 2:12 pm
நெகிரி செம்பிலான் மாநில விவகாரத்தில் சட்டத்துறை அலுவலகம், பிரதமர் தலையிட வேண்டாம்
September 25, 2026, 12:33 pm
நெகிரி செம்பிலான் பாரம்பரிய நெருக்கடி தொடர்பாக ராய்ஸ் யாத்திம் மீது தேசத் நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 25, 2026, 12:06 pm
வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்: MCMC மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது
September 25, 2026, 12:03 pm
நெகிரி செம்பிலானின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம்: AGC விளக்கம் அளிக்க பாஸ் கட்சி கோரிக்கை
September 25, 2026, 11:10 am
சரவாக்கில் உள்ள 4 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 25, 2026, 11:02 am
