செய்திகள் மலேசியா
1எம்டிபி வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய நஜிப்பின் மனு அக்டோபர் 14 அன்று விசாரணைக்கு வருகிறது
கோலாலம்பூர்:
1எம்டிபி வழக்கில், டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனையை, அவர் மேல்முறையீடு செய்யும் வரை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை, அக்டோபர் 14 அன்று விசாரிக்க இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று தேதி நிர்ணயித்தது.
இன்றைய வழக்கு மேலாண்மை நடவடிக்கைகளின் போது, நீதிபதி நூர் ருவேனா முகமது நர்டின் இந்தத் தேதியை நிர்ணயித்தார்.
1எம்டிபி நிதியில் 2.27 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட, நான்கு முறை பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள், 21 முறை பணமோசடி செய்த குற்றச்சாட்டுகளுக்காக விதிக்கப்பட்ட தனது தண்டனை மற்றும் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பிரதமர் மேல்முறையீடு செய்துள்ளார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் தனது தண்டனையை அனுபவித்து முடித்த பிறகு, 1எம்டிபி வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
துணை அரசு வழக்கறிஞர் முகமது முஸ்தபா பி குன்யலாம் அரசுத் தரப்புக்காக ஆஜரானார்.
அதே சமயம் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா நஜிப்பிற்காக ஆஜரானார்.
இதற்கிடையில், நஜிப்பின் மகள் நூரியானா நஜ்வாவும் காலை சுமார் 9.50 மணியளவில் தனது இரண்டு மகன்களுடன் நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டார்.
அவரது தந்தையின் நிபந்தனை மன்னிப்பிற்கான நிபந்தனைகளில் ஒன்றான 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவது குறித்து கேட்கப்பட்டபோது, நூரியானா நஜ்வா தனக்குத் தெரியாது என்று சுருக்கமாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 12:33 pm
நெகிரி செம்பிலான் பாரம்பரிய நெருக்கடி தொடர்பாக ராய்ஸ் யாத்திம் மீது தேசத் நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 25, 2026, 12:06 pm
வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்: MCMC மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது
September 25, 2026, 12:03 pm
நெகிரி செம்பிலானின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம்: AGC விளக்கம் அளிக்க பாஸ் கட்சி கோரிக்கை
September 25, 2026, 11:10 am
சரவாக்கில் உள்ள 4 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 25, 2026, 11:02 am
நஜிப்பின் பொது மன்னிப்பு; மடானி அரசின் பதவிக்காலம் முடியும் வரையிலான சேவையைப் பாதிக்காது: ஃபஹ்மி
September 25, 2026, 10:52 am
காணாமல் போன மகள் வழக்கை இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்
September 25, 2026, 10:45 am
