செய்திகள் மலேசியா
பிரதமரின் கண்டனம்: மந்திரி புசார், ஆட்சிக் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்: இஸ்மாயில் லசிம்
சிரம்பான்:
துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரின் பதவி விலகல் நெருக்கடி தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த கண்டனமும் பதிலும், நெகிரி செம்பிலானில் மந்திரி புசார், ஆட்சிக் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பிரகடனத்திற்கு ஒப்புக்கொண்டதன் அர்த்தம், அவர்கள் நான்காவது உண்டாங்கின் அதிகார வரம்பைக் கைப்பற்றுகிறார்கள் என்பதல்ல என்று மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் கூறினார்.
எனது செயல்களையும் ஆட்சிக் உறுப்பினர்களின் செயல்களையும் முரட்டுத்தனமானவை, நாகரிகமற்றவை என்று வர்ணித்து பிரதமர் நேற்று வெளியிட்ட அறிக்கையை நான் கவனத்தில் கொள்கிறேன்.
அரச குடும்பத்தின் மீதான பிரதமரின் அக்கறையை நான் மதிக்கிறேன்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் மந்திரி புசார், ஆட்சிக் குழுவின் உண்மையான பங்கு குறித்த முழுமையற்ற சித்திரத்தின் அடிப்படையிலேயே இந்தக் கண்டனம் அமைந்துள்ளது என்று நான் அஞ்சுகிறேன் என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 12:33 pm
நெகிரி செம்பிலான் பாரம்பரிய நெருக்கடி தொடர்பாக ராய்ஸ் யாத்திம் மீது தேசத் நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 25, 2026, 12:06 pm
வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்: MCMC மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது
September 25, 2026, 12:03 pm
நெகிரி செம்பிலானின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம்: AGC விளக்கம் அளிக்க பாஸ் கட்சி கோரிக்கை
September 25, 2026, 11:10 am
சரவாக்கில் உள்ள 4 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 25, 2026, 11:02 am
நஜிப்பின் பொது மன்னிப்பு; மடானி அரசின் பதவிக்காலம் முடியும் வரையிலான சேவையைப் பாதிக்காது: ஃபஹ்மி
September 25, 2026, 10:52 am
காணாமல் போன மகள் வழக்கை இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்
September 25, 2026, 10:45 am
