நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்: MCMC மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரிக்கை

கோலாலம்பூர்:

மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் முடக்கப்பட்ட மற்றும் ஊடுருவப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள் குறித்த பொதுமக்களின் புகார்களைத் தீவிரமாக விசாரித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பயனர்களின் நலன்களைக் காக்க இந்தப் பிரச்சினை உடனடியாக மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மிக நெருக்கமாகக் கண்காணித்து வரும் MCMC, பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனத்திடம் முழுமையான ஒத்துழைப்பைக் கோரியுள்ளது.

கணக்கை மீட்க அல்லது சரிபார்க்க விரும்பும் பாதிக்கப்பட்ட பயனர்கள், வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கணக்குகள் ஹேக் செய்யப்படுவதும், முடக்கப்படுவதும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு வெவ்வேறு சிக்கல்கள் என்று MCMC தெளிவுபடுத்தியுள்ளது.

பொறுப்பற்ற நபர்களால் கைப்பற்றப்படும் கணக்குகள் மோசடி மற்றும் ஸ்பேம் போன்ற சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதால், அவை தளத்தால் முடக்கப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் தங்களின் சரிபார்ப்பு குறியீடுகளையோ அல்லது ரகசிய பின்களையும் யாருடனும் பகிர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பயனர்கள் 'இருபக்க சரிபார்ப்பு' (Two-step verification) வசதியை Aktiv செய்து கொள்வதோடு சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

பணம், தனிப்பட்ட விவரங்கள் அல்லது குறியீடுகளைக் கேட்டு கணக்கை மீட்டுத் தருவதாகக் கூறும் நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சிக்கலைத் தீர்க்க முடியாத பட்சத்தில், பயனர்கள் MCMC-யிடம் முறையிடலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset