நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் பொது மன்னிப்பு; மடானி அரசின் பதவிக்காலம் முடியும் வரையிலான சேவையைப் பாதிக்காது: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

மடானி அரசாங்கத்தின் அமைச்சரவை, நிர்வாகத்தின் பதவிக்காலம் முடியும் வரை தனது கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து ஆற்றுவதோடு, நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதில் தொழில்முறையாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது.

தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட பொது மன்னிப்பு முடிவு உட்பட எந்தவொரு அரசியல் பிரச்சினைகளும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான உறவை, குறிப்பாக நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஆகியவற்றுக்கு இடையேயான உறவைப் பாதிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் என்ன கூறப்பட்டாலும் சரி, அனைத்து கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் (நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான) அர்ப்பணிப்பை நாங்கள் காண்கிறோம். இது முக்கியமானது.

ஏனெனில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு, அவர்கள் இரண்டு முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொள்வார்கள்.

அதாவது அரசியல் நிலைத்தன்மை கொள்கைகள் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset