செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம்: AGC விளக்கம் அளிக்க பாஸ் கட்சி கோரிக்கை
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தேசிய சட்டத்துறை அலுவலகம் விளக்கம் அளிக்க பாஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
இப்பதவி நீக்க நடவடிக்கை தொடர்பான சட்டப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவது அவசியமான ஒன்றாகும் என்று அக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
மந்திரி பெசாரின் பிரகடனம் செல்லாது என்று AGC அலுவலகம் இதற்கு முன் மிக விரைவாக அறிவிப்பு வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி பாஸ் கட்சி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஆனால், மாநிலத்தின் 10 எம்கோக்களின் பதவி நீக்க விவகாரத்தில்மட்டும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறது.
இந்த மௌனம் பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக PAS தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் YANG DI-PERTUAN BESAR துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் உத்தரவின்பேரில் செப்டம்பர் 20 முதல் இந்தப் பதவி நீக்கம் அமலுக்கு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 12:33 pm
நெகிரி செம்பிலான் பாரம்பரிய நெருக்கடி தொடர்பாக ராய்ஸ் யாத்திம் மீது தேசத் நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 25, 2026, 12:06 pm
வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்: MCMC மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரிக்கை
September 25, 2026, 11:10 am
சரவாக்கில் உள்ள 4 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 25, 2026, 11:02 am
நஜிப்பின் பொது மன்னிப்பு; மடானி அரசின் பதவிக்காலம் முடியும் வரையிலான சேவையைப் பாதிக்காது: ஃபஹ்மி
September 25, 2026, 10:52 am
காணாமல் போன மகள் வழக்கை இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்
September 25, 2026, 10:45 am
