நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் உள்ள 4 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கூச்சிங்: 

இன்று காலை 9 மணிவரை சரவாக் மாநிலத்தில் உள்ள நான்கு பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டன

குறிப்பாக, செரியானில் IPU காற்றின் குறியீடு 178ஆக பதிவு செய்யப்பட்டது. இதுவே அப்பகுதியில் மிக அதிகமான புள்ளியாக மதிப்பிடப்பட்டது 

சரவாக் மாநிலத்தில் உள்ள இதர பகுதிகளான கூச்சிங், சமராஹானில் 165ஆகவும் 163ஆகவும் காற்றின் தரம் உள்ளதாக மலேசிய காற்று மாசுபாடு நிர்வாக மேலாண்மை APIMS தெரிவித்தது 

நாடு முழுவதும் 61 இடங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் பதிவு செய்யப்பட்டன. கோலாலம்பூர் பத்துமூடாவில் 73ஆகவும் பெர்லிஸ் கங்காரில் 52ஆகவும் பாலிக் புலாவ்வில் 55ஆகவும் காற்றின் தரம் உள்ளது 

0 முதல் 50 வரை காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையிலும் 51 முதல் 100 வரை மிதமான அளவிலும் 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையிலும் 201 முதல் 300 வரை மிக ஆரோக்கியமற்ற நிலையிலும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset