செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
சென்னை:
தமிழகத்தில் டெங்கி காய்ச்சலால் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 2,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
டெங்கி காய்ச்சல் தடுப்பு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
டெங்கி காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரிப்பதால், தமிழகத்தில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 200-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் சென்னையில் 79 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 900-க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 17,277 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 10:34 pm
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
