நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படவுள்ளது: முதலமைச்சர் அறிவிப்பு

மலாக்கா:

மலாக்கா மாநில சட்டமன்றம் நாளை அதிகாரப்பூர்வமாக  கலைக்கப்படும்.

இதன் மூலம், 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டிய 16வது பொதுத் தேர்தலுக்கு வழிவகை செய்யப்படும்.

இந்தக் கலைப்பிற்கு மலாக்கா மாநில ஆளுநர் துன் அலி ருஸ்தம் ஒப்புக்கொண்டதாக முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோ கூறினார்.

ரவுஃபின் இந்த அறிவிப்பு, அடுத்த பொதுத் தேர்தல் குறித்த ஊகங்களுக்கு மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்தது.

மலாக்கா மாநில சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் இந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset