செய்திகள் தமிழ் தொடர்புகள்
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
சென்னை:
தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை, முறைப்படுத்தவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘காவல் துறை விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்ட நோக்கம் இல்லை.
அதேபோல் விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, சேவல் சண்டையை முறைப்படுத்தவே டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்ததாகவும், சேவல் சண்டைக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிஜிபியின் இந்த சுற்றறிக்கை குறித்து போலீஸாருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், சேவல் சண்டைக்கு எந்த தடையும் இல்லாததால், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் துறையினரை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 3:23 pm
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
