நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியப் போட்டியில்  மலேசியாவின் முதல் தங்கப்பதக்கத்தை அடெயோலா வென்றார்

நகோயா:

பெண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவு கராத்தே குமித்தே இறுதிப் போட்டியில், ஈரானின் ஃபாத்திமா ஜஹ்ரா சயீதாபாடியை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து, அடெயோலா ஃபே ராபர்ட் ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளில், கராத்தே மலேசியாவின் முதல் இரண்டு பதக்கங்களைப் பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவு குமித்தே போட்டியில் கே. தேவேந்திரன் வெண்கலப பதக்கமும், ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவு குமித்தே போட்டியில் எச். சுரேய சங்கர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

அடெயோலாவின் இந்தத் தங்கப் பதக்க வெற்றியானது, தேசிய கராத்தே அணி மூன்று பதக்கங்களை வெல்ல வழிவகுத்தது.

மேலும்  மலேசியாவின் பதக்க வேட்டைக்கு ஒரு முக்கிய உத்வேகத்தையும் அளித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset