நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தவறு செய்த முதலாளிகளுக்கு 15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 25,011 அபராத சம்மன்களை பெர்கேசோ வழங்கியுள்ளது

கோலாலம்பூர்:

கடந்த 2020 முதல் 'ஆப் கெசான்' நடவடிக்கையின் போது தங்கள் வணிகங்களையும் ஊழியர்களையும் பதிவு செய்யத் தவறிய முதலாளிகளுக்கு, பெர்கேசோ 15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 25,011 அபராத சம்மன்களை வழங்கியுள்ளது.

அந்தக் காலகட்டத்தில், சமூகப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பல்வேறு குற்றங்கள் தொடர்பான மொத்தம் 21,177 வழக்குகளும் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

'ஆப் கெசான் 2.0' அமலாக்கத்தின் கவனம் இப்போது முறைசாராத் துறையையும், குறிப்பாகக் கட்டாயத் துறைகளாக வகைப்படுத்தப்பட்ட மூன்று துறைகளையும் உள்ளடக்கியுள்ளது என்று பெர்கேசோவின் செயல்பாடுகளுக்கான துணைத் தலைமை நிர்வாக அதிகாரி அஸிருவான் அரிபின் கூறினார்.

கிக் தொழிலாளர்கள் சட்டம் 2025 (சட்டம் 872),  சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789) ஆகியவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வலையை வலுப்படுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 54 பெர்கேசோ அலுவலகங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அமலாக்கப் பணியாளர்களை உள்ளடக்கி, இந்த மாபெரும் நடவடிக்கை ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டது.

சட்டம் 789-இன் படி, சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் (லிண்டுங் கெண்டிரி) கீழ் அவர்கள் பங்களிக்க வேண்டும்.

சட்டம் 872-இன் படி, தள வழங்குநர்கள் பதிவு மற்றும் பங்களிப்புகள் தவறாமல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும்,  கடந்த செப்டம்பர் 7 நிலவரப்படி 1.17 மில்லியன் கிக் தொழிலாளர்கள் பெர்கேசோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கெசான் 2.0 நடவடிக்கை மூலம், விதிகளை மீறிய முதலாளிகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.

உடனடியாக அபராதம் விதிக்கப்படுவதுடன், கண்டனங்களும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset