நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் வீட்டுக் காவல் ஆணை; அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது: கைரி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு, அவரது வழக்கையும் தாண்டி, மன்னிக்கும் மாமன்னரிம் அதிகாரத்தின் எதிர்கால விளக்கங்களை வடிவமைப்பதன் மூலம் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.


'கெலுவார் செகேஜாப்' பாட்காஸ்டின் சமீபத்திய அத்தியாயத்தில் பேசிய முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் இவ்வாறு கூறினார்.
இந்த முடிவை முதன்மையாக மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒரு செயல்பாடாகவே பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.

மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாமன்னரிம் அரசியலமைப்பு ரீதியான சிறப்புரிமையாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போதும் வலியுறுத்தி வருகிறார் என அவர் கூறினார்.

எனவே, நாம் வலியுறுத்த வேண்டிய முதல் கொள்கை என்னவென்றால், இதை மாமன்னரின் அதிகாரமாக, அதாவது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு அரசியலமைப்பு அதிகாரமாக நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இது மாமன்னரின் முழுமையான அதிகாரம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset