செய்திகள் மலேசியா
ஃபெல்டா (Felda) மீதான விசாரணை: சுங்கை புலோ சிறையில் உள்ள ஈசா சமத்திடம் எம்.ஏ.சி.சி. வாக்குமூலம் பெறுகிறது
சுங்கை புலோ:
2010 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பாக ஃபெல்டா (Felda), அதன் துணை நிறுவனமான ஃபெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (Felda Investment Corporation Sdn Bhd) மீதான விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), ஃபெல்டாவின் முன்னாள் தலைவர் டத்தோ ஈசா சமத்திடமிருந்து சுங்கை புலோ சிறையில் வாக்குமூலம் பெற்று வருகிறது.
'ஆப் ஃபெல்டா' (Op Felda) என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியின் மூலம், ஆறு புதிய விசாரணை கோப்புகள் தொடங்கப்பட்டு, ஏற்கனவே இருந்த ஒரு கோப்பு மறுஆய்வு செய்யப்படுகிறது என்று டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமன் கூறினார்.
ஈசாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் பணியை வியாழக்கிழமைக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பீடு தொடர்பான ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, இதுவரை முன்னாள் வாரிய உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 34 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 11:41 am
நஜிப்பின் இல்லத்திற்குச் சிறைத்துறையின் வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன
September 19, 2026, 11:32 am
நாட்டில் கடந்த செப்டம்பர் 16 வரை 68,177 பேர் வேலையை இழந்துள்ளனர்
September 19, 2026, 11:31 am
நஜிப்பின் வீட்டுக் காவல் ஆணை; அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது: கைரி
September 18, 2026, 10:15 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கிய மாமன்னருக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 18, 2026, 9:32 pm
டத்தோஸ்ரீ நஜிப்பின் மன்னிப்பை அரசியலாக்க வேண்டாம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 18, 2026, 9:31 pm
