நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் இல்லத்திற்குச் சிறைத்துறையின் வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன

கோலாலம்பூர்:

செப்டம்பர் 19 அன்று, கோலாலம்பூரில் உள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் இல்லத்திற்குச் சிறைத்துறையைச் சேர்ந்த இரண்டு வாகனங்கள் இன்று காலை வந்தன.

அங்கு வந்தவர்கள் நஜிப்பின் உதவியாளருடன் உரையாடியதுடன், அந்த இல்லத்தையும் முழுமையாக ஆய்வு செய்தனர்.

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவதற்கு உட்பட்டு, ஆகஸ்ட் 23, 2028 வரை எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் வகையில் நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வருகை நிகழ்ந்தது.

மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலுடன், 64-ஆவது பொதுமன்னிப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset