நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

165 நாடுகளுக்கு சமூக பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை பெர்கேசோவின் தலைமை இயக்குநர் தான் வழங்குகிறார்: டத்தோஸ்ரீ ரமணன்

கோத்தா டாமன்சாரா:

165 நாடுகளுக்கு சமூக பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை பெர்கேசோவின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மான் தான் வழங்குகிறார்.


இது மலேசியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும் என்று மனிதவள அமைச்ச டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

பெர்கேசோ 24 மணி நேர பாதுகாப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் அமலுக்கு வந்த போது பல்வேறு கேள்விகள் எழுந்தன.

ஆனால் தற்போது கிட்டத்தட்ட 87 சதவீதம் தொழிலாளர்கல் இத்திட்டத்தில் பங்களிக்கின்றனர்.

எஞ்சிய 13 சதவீதம் பேர் தான் இத்திட்டத்தில் பங்களிக்கலாமா வேண்டாமா என்று சிந்தித்து வருகின்றனர்.

என்னை பொருத்த வரையில் இந்த சிந்தனையே தொழிலாளர்களுக்கு தேவையில்லை.

காரணம் இந்த பாதுகாப்பு அனைவருக்கும் மிகவும் அவசியமாகும்.


அவ்வகையில் பல்வேறு ஆய்வுகளுக்கு மத்தியில் தான் பெர்கேசோ திட்டங்களை அமலுக்கு கொண்டு வருகிறது.

குறிப்பாக பெர்கேசோவின் தலைமை  இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், அனைத்துலக சமூக பாதுகாப்பு சம்மேளத்திற்கு தலைவராக உள்ளார்.

கிட்டத்தட்ட 165 நாடுகள் அவரிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று செல்கின்றன.

ஆக பெர்கேசோவின் திட்டங்கள் நமது நாட்டிற்கும் நமது ஊழியர்களுக்கும் தவறான ஒன்றாக அமையாது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset