செய்திகள் மலேசியா
பெர்கேசோவின் மெகா iLINDUNGu விழா 2,000 வேலை வாய்ப்புகளுடன் 500 கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
கோத்தா டாமன்சாரா:
பெர்கேசோவின் மெகா iLINDUNGu விழா 2,000 வேலை வாய்ப்புகளுடன் 500 கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
கோத்தா டமான்சாராவில் உள்ள ஸ்ட்ராண்ட் மாலில் மெகா ஐலிண்டுங்யு விழா நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.
இவ்விழாவில் MYFutureJobs மூலம், 25 நிறுவனங்கள் 2,000 முதல் 12,000 ரிங்கிட் வரையிலான சம்பளத்துடன் சுமார் 2,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளன.
இங்கு வருபவர்கள் வெறும் தகவல்களைத் தேடி வருபவர்கள் மட்டுமல்ல, அவர்கள் வேலை வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்புக்கான அணுகல், அவர்களின் வாழ்க்கையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
வேலை தேடுபவர்கள் அல்லது தங்கள் தொழில் வாழ்க்கையை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நாங்கள் நிறுவனங்களையும் வேலை வாய்ப்புகளையும் நேரடியாக மக்களிடம் கொண்டு வருகிறோம் என்று அவர் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
மேலும் இவ்விழாவில் லிண்டுங் காசி சூரி ரூமா (LINDUNG Kasih Suri Rumah) மூலம் 48,000 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது.
இதன் மூலம், 400 இல்லத்தரசிகளுக்குப் பாதுகாப்புப் பலன்கள் விரிவுபடுத்தப்பட்டன.
இதற்கிடையில் Foodpanda 1 மில்லியன் ரிங்கிட், Grab 500,000 ரிங்கிட், Halo 14,41215 என மொத்தம் 1,514,412.40 ரிங்கிட்டை பெர்கேசோவின் பாதுகாப்பு திட்டத்திற்கு பங்களித்தன.
இதன் மூலம் 500 இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், பி-ஹெய்லிங் அனுப்புநர்களுக்குப் பயனை பெற்றனர்.
ஒவ்வொரு ஓட்டுநருக்குப் பின்னாலும், அவர்களின் வருமானத்தைச் சார்ந்து வாழும் ஒரு குடும்பம் உள்ளது.
அதனால் தான் சமூகப் பாதுகாப்பைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எதிர்பாராத ஒன்று நிகழும்போது இது ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு வலையாகும்.
இது போன்ற ஒத்துழைப்புகள், பகுதி நேரப் பணியாளர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு மட்டுமல்லாமல், பாதுகாப்பும் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கமும் தொழிற்துறையும் இணைந்து செயல்பட முடியும் என்பதைக் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
ஐலிண்டுங்யு மெகா திருவிழா, செப்டம்பர் 18 முதல் 20 வரை திருவிழா முழுவதும், முன்னர் காப்பீட்டைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்த ஊழியர்கள் நேரடியாக மீண்டும் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கும் ஒரு சிறப்பு 24 மணி நேர லிண்டுங் விருப்பப் பதிவு மையத்தையும் வழங்கியது.
தொடக்கப் பங்களிப்புப் பலன்களில் (FCLB) 80 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறும் வாய்ப்பும் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், பார்வையாளர்கள் பங்களிப்புகளைச் சரிபார்க்கவும், பலன்கள் குறித்த ஆலோசனைகளைப் பெறவும், பெர்கேசோ திட்டங்களில் பதிவு செய்யவும் முடிந்தது என்று அவர் கூறினார்.
பெர்கேசோ வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமல், பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமது ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 11:49 am
ஃபெல்டா (Felda) மீதான விசாரணை: சுங்கை புலோ சிறையில் உள்ள ஈசா சமத்திடம் எம்.ஏ.சி.சி. வாக்குமூலம் பெறுகிறது
September 19, 2026, 11:41 am
நஜிப்பின் இல்லத்திற்குச் சிறைத்துறையின் வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன
September 19, 2026, 11:32 am
நாட்டில் கடந்த செப்டம்பர் 16 வரை 68,177 பேர் வேலையை இழந்துள்ளனர்
September 19, 2026, 11:31 am
நஜிப்பின் வீட்டுக் காவல் ஆணை; அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது: கைரி
September 18, 2026, 10:15 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கிய மாமன்னருக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 18, 2026, 9:32 pm
