நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கிய மாமன்னருக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர்  டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கி மாமன்னருக்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை கூறினார்.

மாட்சிமை தங்கிய மாமன்னரின் தலைமையில்  நடைபெற்ற கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் 64ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதாவது  நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பின்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை செலுத்தினால், நஜிப் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்படுவார்.

நஜிப்பிற்கு இந்த மன்னிப்பை வழங்கிய மாமன்னருக்கு கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் மாமன்னரின் இந்த முடிவை அனைவரும் மதிக்க வேண்டும். இதை யாரும் அரசியலாக்கி விவாதிக்கக் கூடாது என நான் கேட்டுக் கொள்கிறேன்.

டத்தோஸ்ரீ நஜிப் சமூக சேவைக்கும் நாட்டிற்கும் தனது வாழ்நாளில் 50 ஆண்டுகளை அர்ப்பணித்தவர்.

ஒருவரின் அந்தஸ்து உயர்ந்ததாக இருப்பதால் அதிக சலுகை அளிக்கப்படுகிறது

தனிப்பட்ட முறையில், நாட்டிற்கான நஜிப்பின் நீண்டகால சேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு முழுமையான மன்னிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்

இருப்பினும் இது மாமன்னரின் முடிவாகும். இதை யாரும் கேள்விக்குள்ளாக்க கூடாது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்







தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset