நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகர் மாட்ரேட் சென்டரில் மாபெரும் மீலாதுன் நபி பெருவிழா - மாணவ மாணவிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி: ஷேய்க் அகார் முஹம்மது சிறப்புரை

கோலாலம்பூர்:

தலைநகர் மாட்ரேட் சென்டரில் மாபெரும் மீலாதுன் நபி பெருவிழாவும் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் சிறந்த அடைவு நிலை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியும் சனிக்கிழமை 19.09.2026 மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அஸ்மி சதக்கத்துல்லாஹ் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா ஓல்டு டவுன் முஸ்லிம் முன்னேற்ற சங்கமும் (AKM) அல் மதரசத்துல் முஹம்மதியாவும் இணைந்து உத்தம நபி (ஸல்) உதய தின விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளன.

சங்கத்தின் தலைவர் ஹாஜி நஜ்முத்தீன், மதரசாவின் தலைவர் ஹாஜி இப்ராஹிம், சிறப்பான வழிகாட்டுதலில் விழாக் குழுவினர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து வருகின்றனர். 31 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக சர்வதேச மார்க்க அறிஞரும் இலங்கை நளீமியாப் பலகலைக் கழகத்தின் இயக்குனருமான அஷ் ஷேய்க் அகார் முஹம்மது பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வியல் விழுமியங்களை சொற்பொழிவாற்ற இருக்கின்றார்கள்.

சமூகத்திற்கு சேவைகள் புரிந்தவர்களுக்கு சிறப்பு செய்யப்பட உள்ளதாக அஸ்மி கூறினார்.

எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்கள் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset