செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு: மாமன்னருக்கு மஇகா, மசீச நன்றி
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளான மஇகா, மசீசவின் தலைவர்கள், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ம், மாமன்னரின் இந்த முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் டத்தோஸ்ரீ நஜிப் தனது பிரதமர் பதவிக் காலத்தில் நாட்டிற்கு, குறிப்பாக இந்திய சமூகத்திற்கு, பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
நாட்டிற்காக அவர் செய்த பல நல்ல காரியங்களையும் முயற்சிகளையும் யாராலும் மறுக்க முடியாது என்று அவர் கூறினார்.
அவரிடம் என்னென்ன குறைகள் இருந்தாலும், அவர் பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
டத்தோஸ்ரீ நஜிப் போன்ற ஒருவருக்கு, பல ஆண்டுகள் சிறைவாசம் என்பது போதுமானதை விட அதிகம். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படத் தகுதியானவர்.
நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு குறித்த மாமன்னரின் அறிக்கையை மசீச தலைவர் வீ கா சியோங் பாராட்டினார்.
மேலும், நீதித்துறை செயல்முறையையும் மன்னிப்பு செயல்முறையையும் இரண்டு வெவ்வேறு செயல்முறைகளாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 9:32 pm
டத்தோஸ்ரீ நஜிப்பின் மன்னிப்பை அரசியலாக்க வேண்டாம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 18, 2026, 9:31 pm
நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு மக்களுக்கு மிகவும் முக்கியமானது: பாஸ்
September 18, 2026, 5:05 pm
பாறை இடிந்து விழுந்து இந்திய ஆடவர் மரணம்; குவாரி செயல் பாட்டை தற்காலிகமாக மூட உத்தரவு: டத்தோ சிவநேசன்
September 18, 2026, 5:03 pm
நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்: ரபிசி
September 18, 2026, 5:03 pm
நஜிப் வீட்டுக் காவல்; ஊழல் நடைமுறைகளுக்கு அரசாங்கம் அடிபணிகிறது என்று அர்த்தமல்ல: பிரதமர்
September 18, 2026, 1:46 pm
