நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்: ரபிசி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவலுக்கு விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நம்பிக்கை கூட்டணி தலைமை வெளியிட வேண்டும்.

மலேசிய பெர்சாமா கட்சியின் தலைவர் ரபிசி ரம்லி இதனை வலியுறுத்தியுள்ளார்.

இன்று நஜிப்பிற்கு நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை குறைந்தபட்சம் மக்களிடமாவது தெரிவிக்கப்பட வேண்டும் என்று ரஃபிஸி கூறினார்.

இந்த வீட்டுக் காவல் விடுதலையானது விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி கண்டிப்பாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, சாதாரண மக்களே சமூகத்தின் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கட்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமால் நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, அவர் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம், பிற நிபந்தனைகளைச் செலுத்துவதற்கு உட்பட்டு, தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்படுகிறார்.

பிரதமரின் துறையின் சட்ட விவகாரப் பிரிவு, முன்னாள் பிரதமர் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும், இல்லையெனில் நிபந்தனை மன்னிப்பு ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளது.

இருப்பினும், நிபந்தனைகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அது முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்று ரபிசி வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset