நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் வீட்டுக் காவல்; ஊழல் நடைமுறைகளுக்கு அரசாங்கம் அடிபணிகிறது என்று அர்த்தமல்ல: பிரதமர்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு பொது மன்னிப்பு வழங்கும் முடிவு, அனைத்து ஊழல், அதிகார துஷ்பிரயோக வழக்குகளுக்கு எதிராகவும் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்தின் கொள்கையைப் பாதிக்காது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

அரசாங்கம் கடைப்பிடிக்கும் சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கை அப்படியே உள்ளது.

நாடு ஊழல் நடைமுறைகளுக்கோ அல்லது அதிகார துஷ்பிரயோகத்திற்கோ அடிபணிய வேண்டும் என்று அர்த்தமல்ல என்று அன்வார் கூறினார்.

முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட, இன்னும் நடந்து கொண்டிருக்கும் வழக்கு உட்பட அனைத்து ஊழல் வழக்குகளும் சட்டப்படி தொடரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் இறுதியில், அரசியலமைப்புச் சட்டம் மாமான்னரின் முழுமையான அதிகாரத்தை நிலைநாட்டுகிறது, அதை நாம் நன்கு ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன்.

அது தவிர, சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டிலும், அனைத்து ஊழல் வழக்குகளிலும் நடவடிக்கை எடுப்பதற்கான எங்கள் முடிவிலும் எந்த சமரசமும் இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இதன் பொருள், நாடு லஞ்சம், ஊழல் நடைமுறைகளுக்கு அடிபணிய வேண்டும் என்பதல்ல என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset