நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு: மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி 

கோலாலம்பூர்: 

நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அவர் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது 

நாட்டின் பேரரசர், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தலைமையில் நடைபெற்ற மன்னிப்பு வாரிய கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக  எடுகப்பட்டது 

இந்த மன்னிப்பு சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு மட்டுமே உட்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகையான 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை நஜிப் ரசாக் செலுத்த வேண்டும்

மேலும், 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை அவர் வீட்டுக் காவலில் இருக்க வேண்டும்.

அரசாங்கம் விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் நஜிப் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளில் எதையேனும் அவர் மீறினால் பொதுமன்னிப்பு தானாகவே ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset