செய்திகள் மலேசியா
தூங்கிக்கொண்டிருந்த மைத்துனரை மூன்று முறை கத்தியால் குத்திய பதின்ம வயது இளைஞருக்கு ஏழு நாட்கள் நீதிமன்றக் காவல்
பத்துபகாட்:
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்ததாக நம்பப்படும் ஒரு பதின்ம வயது இளைஞர், நேற்று தனது மைத்துனியை மூன்று முறை கத்தியால் குத்தி, அவரது முதுகு, நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இன்று ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
பழைய பொருட்களை விற்கும் கடையில் உதவியாளராகவும் பணிபுரியும் 17 வயது சந்தேக நபருக்கான இந்த நீதிமன்றக் காவல் உத்தரவை, காவல்துறை தங்கள் விசாரணையை முடிக்க அனுமதிக்கும் வகையில் மாஜிஸ்திரேட் முஸ்தகிம் சுகர்னோ வழங்கினார்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 5 மணிக்கு, மின்யாக் பெக்குவில் உள்ள தாமான் தேசா ஸ்ரீ பனாங் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்துள்ளது.
அப்போது சந்தேக நபர், 14.5 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியைப் பயன்படுத்தி, 18 வயதான பாதிக்கப்பட்டவரை மார்பிலும் முதுகிலும் குத்தியதாக நம்பப்படுகிறது.
சம்பவத்திற்கு முந்தைய நாள் மாலை 5 மணிக்கு, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த மனைவி, சந்தேக நபரின் 14 வயது சகோதரியும் ஆவார்.
இந்த வாக்குவாதத்தை சந்தேக நபரும் நேரில் கண்டார்.
ஆனால் அந்த நபர் அமைதியாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 12:51 pm
மலேசிய தங்க விழாவின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் காண்கிறது: டத்தோ அப்துல் ரசூல்
September 18, 2026, 12:04 pm
60,000 வருகையாளர்கள் என்ற இலக்குடன் பெர்கேசோவின் மெகா iLINDUNGu விழா கோத்தா டாமன்சாரா ஸ்ட்ராண்ட் மாலில் தொடங்கியது
September 18, 2026, 11:58 am
சிட்னிக்குச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் மருத்துவ அவசரநிலை: பயணி ஒருவர் உயிரிழப்பு
September 18, 2026, 11:06 am
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும்: வழக்கறிஞர் ரொஸ்லி டஹ்லான் கருத்து
September 18, 2026, 10:35 am
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
