செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும்: வழக்கறிஞர் ரொஸ்லி டஹ்லான் கருத்து
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை நீக்கும் பிரகடனம் குறித்து மாநில அரசாங்கத்தின் அறிக்கை என்பது அரசியலமைப்பு எதிரானது என்று நேற்று தேசிய சட்டத்துறை அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெளிவுப்படுத்தியது
இதற்கு பொறுப்பேற்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும் என்று வழக்கறினர் ரொஸ்லி டஹ்லான் வலியுறுத்தியுள்ளார்
மேலும், YANG DI-PERTUAN BESAR பதவியிலிருந்து துவாங்கு முஹ்ரிஸை நீக்கிய பிரகடனத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற இஸ்மாயிலின் கோரிக்கைக்கு எதிராக மாநில நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று நேற்று மாநிலச் செயலாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பை ரோஸ்லி டஹ்லான் குறிப்பிட்டார்.
இஸ்மாயில் லாசிம் மாநில அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார். இதனால் அவர் மந்திரி பெசார் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஒரு மாநில ஆட்சியாளரை நீக்க மாநில நிர்வாக ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை. மேலும், ஏப்ரல் 19ஆம் தேதி துவாங்கு முஹ்ரீஸை நீக்கம் செய்த 4 உண்டாங் அவர்களின் நடவடிக்கையும் செல்லாது என்று AGC விளக்கம் அளித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 12:04 pm
60,000 வருகையாளர்கள் என்ற இலக்குடன் பெர்கேசோவின் மெகா iLINDUNGu விழா கோத்தா டாமன்சாரா ஸ்ட்ராண்ட் மாலில் தொடங்கியது
September 18, 2026, 12:03 pm
தூங்கிக்கொண்டிருந்த மைத்துனரை மூன்று முறை கத்தியால் குத்திய பதின்ம வயது இளைஞருக்கு ஏழு நாட்கள் நீதிமன்றக் காவல்
September 18, 2026, 11:58 am
சிட்னிக்குச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் மருத்துவ அவசரநிலை: பயணி ஒருவர் உயிரிழப்பு
September 18, 2026, 10:35 am
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
டாவ்லாட் துவாங்கு, துரோகிகளைப் பிடியுங்கள் என்ற கோஷங்களுடன் துவாங்கு முஹ்ரிஸை வரவேற்க 100 பேர் கேஎல்ஐஏவில் கூடினர்
September 17, 2026, 10:55 pm
