செய்திகள் மலேசியா
சிட்னிக்குச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் மருத்துவ அவசரநிலை: பயணி ஒருவர் உயிரிழப்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில், நடுவானில் ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து பயணி ஒருவர் உயிரிழந்தார்.
MH 141 விமானத்தில் பயணித்த அந்த நபருக்கு விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக விமானப் பணியாளர்களும், விமானத்தில் இருந்த மருத்துவர்களும் இணைந்து அவசர சிகிச்சை அளித்தனர்.
ஒரு மருத்துவர், மூன்று செவிலியர்கள் மற்றும் விமானப் பணியாளர் ஒருவர் இணைந்து சிபிஆர் எனப்படும் இதய-நுரையீரல் மீட்பு சிகிச்சையை மேற்கொண்டனர்.
எனினும், அந்தப் பயணியை உயிர் பிழைக்க வைக்க முடியாத நிலையில், விமானத்தில் இருந்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்தவர் இந்தியாவைச் சேர்ந்த 58 வயதான நபர் என்றும், சுமார் 8 மணி நேரப் பயணத்தின் போது அவருக்கு கடுமையான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அதன் விளைவாக ஏற்பட்ட விமானப் பயண இடையூறுகளுக்காக வருத்தமும் தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 12:51 pm
மலேசிய தங்க விழாவின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் காண்கிறது: டத்தோ அப்துல் ரசூல்
September 18, 2026, 12:04 pm
60,000 வருகையாளர்கள் என்ற இலக்குடன் பெர்கேசோவின் மெகா iLINDUNGu விழா கோத்தா டாமன்சாரா ஸ்ட்ராண்ட் மாலில் தொடங்கியது
September 18, 2026, 12:03 pm
தூங்கிக்கொண்டிருந்த மைத்துனரை மூன்று முறை கத்தியால் குத்திய பதின்ம வயது இளைஞருக்கு ஏழு நாட்கள் நீதிமன்றக் காவல்
September 18, 2026, 11:06 am
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும்: வழக்கறிஞர் ரொஸ்லி டஹ்லான் கருத்து
September 18, 2026, 10:35 am
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
