செய்திகள் மலேசியா
பூச்சோங் தொழிற்துறை பூங்காவில் பயங்கர தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் நாசமானது
பூச்சோங்:
சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள தொழிற்துறை பூங்காவில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் நாசமாகின
இந்த தீ விபத்து குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பதுறை உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஸ்பார் ஊடகங்களுக்குத் தகவல்களை உறுதிப்படுத்தினார்.
காலை சரியாக 6.34 மணியளவில் தீ விபத்து தொடர்பான அவசர அழைப்பு தங்களுக்குக் கிடைத்ததாக அவர் கூறினார். இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்குத் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
இந்த தீ விபத்தினால் மொத்தம் 80க்கு 100 அடி பரப்பளவு கொண்ட நான்கு முக்கிய வளாகங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. இதில் ஒரு டயர் தொழிற்சாலை, குழாய் மற்றும் வால்வு வன்பொருள் தொழிற்சாலை ஆகியவை அடங்கும்.
இந்த மீட்பு மற்றும் அணைப்புப் பணியில் Puchong, Subang Jaya உள்ளிட்ட பல்வேறு நிலையங்களிலிருந்து வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மொத்தம் 33 தீயணைப்பு வீரர்களும் 12 தீயணைப்பு வாகனங்களும் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன.
Penchala, Petaling Jaya, Seri Kembangan மற்றும் Cyberjaya தீயணைப்பு நிலையங்களும் இந்த நடவடிக்கைக்கு உடனடி உதவிகளை வழங்கின. பல நிலையங்களின் கூட்டு முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்துக்கான உண்மையான காரணம் மற்றும் சேதமதிப்பீடு குறித்த விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 12:49 pm
பெர்கேசோவின் மெகா iLINDUNGu திருவிழா: 2,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
September 17, 2026, 12:19 pm
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
September 17, 2026, 12:18 pm
சபா, சரவாக் தலைவர்களிடமிருந்து நட்பை கற்றுக் கொள்ளுங்கள்: ஜாஹித் முன்னிலையில் அன்வார் கூறினார்
September 17, 2026, 12:17 pm
16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் நடைபெறலாம்?: மசீச
September 17, 2026, 12:17 pm
நகைக் கடையில் இரண்டாவது முறையாகக் கொள்ளை: 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது
September 17, 2026, 11:36 am
