செய்திகள் மலேசியா
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
பிறை:
பினாங்கு மாநில பிறையில் 14 வயது சிறுவன் ஒருவன் தான் ஓட்டிச் சென்ற காரால் இருவேறு இடங்களில் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளான்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 4.50 மணியளவில் நிகழ்ந்ததாக செபராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர் ACP நிக் அமினுடின் ராஜா அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
மேலும், இது தொடர்பாக அதே இரவில் 8.47 மணியளவில் அதிகாரப்பூர்வமான காவல்துறைக் புகாரும் பெறப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, சிறுவன் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது
அந்த விபத்தையடுத்து நிற்காமல் எதிர்திசையில் காரைச் செலுத்த முயன்றுள்ளான். அப்போது சரியான பாதையில் வந்த மற்றொரு நடமாடும் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளான்.
இந்தத் தொடர் விபத்துகளில் மூன்று கார்களும் பலத்த சேதமடைந்ததாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் உதவியோடு அந்தச் சிறுவனின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாலைப் போக்குவரத்து சட்டம் 1987-ன் பிரிவு 42(1)-ன் கீழ் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 12:49 pm
பெர்கேசோவின் மெகா iLINDUNGu திருவிழா: 2,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது
September 17, 2026, 12:28 pm
பூச்சோங் தொழிற்துறை பூங்காவில் பயங்கர தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் நாசமானது
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
September 17, 2026, 12:18 pm
சபா, சரவாக் தலைவர்களிடமிருந்து நட்பை கற்றுக் கொள்ளுங்கள்: ஜாஹித் முன்னிலையில் அன்வார் கூறினார்
September 17, 2026, 12:17 pm
16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் நடைபெறலாம்?: மசீச
September 17, 2026, 12:17 pm
நகைக் கடையில் இரண்டாவது முறையாகக் கொள்ளை: 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது
September 17, 2026, 11:36 am
