செய்திகள் மலேசியா
சபா, சரவாக் தலைவர்களிடமிருந்து நட்பை கற்றுக் கொள்ளுங்கள்: ஜாஹித் முன்னிலையில் அன்வார் கூறினார்
கூச்சிங்:
மலேசிய தினக் கொண்டாட்டத்தில் ஆற்றிய தனது உரையின்போது, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சபா, சரவாக் அரசியல்வாதிகளைப் பாராட்டியதோடு, தனது துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியை கிண்டலாகவும் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் உரசல்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
டத்தோஶ்ரீ அன்வார் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க, போர்னியோ கூட்டமைப்பின் தொடர்ச்சியான ஆதரவு அவருக்குத் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரவாக்கின் கூச்சிங்கில் டத்தோஶ்ரீ அன்வார் தனது மலேசிய தின உரையை நிகழ்த்தினார். ஜாஹித், சரவாக் முதல்வர் அபாங் ஜோஹரி ஓபெங், சபா முதலமைச்சர் ஹஜிஜி நூர் உள்ளிட்ட மத்திய, கிழக்கு மலேசிய மாநில அரசாங்கங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தனது உரையில், சபா, சரவாக் தலைவர்களின் தோழமை உணர்விற்கு அன்வர் பாராட்டு தெரிவித்தார்.
அமைச்சரவை மட்டத்திலான தலைமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஆம், சில சமயங்களில் சட்டமன்றத்தில் எழும் குரல்கள் போன்றவை சற்று உறுத்தலாகத்தான் இருக்கும், அது இயல்பானதுதான். அமைதியாக இருங்கள் என்று அவர் புன்னகையுடன் கூறினார்.
ஆனால், சரவாக் மற்றும் சபா மாநில அரசாங்கங்களின் தலைமைகளுடனான எனது உறவில், அத்தகைய நெருங்கிய நட்பை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 12:49 pm
பெர்கேசோவின் மெகா iLINDUNGu திருவிழா: 2,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது
September 17, 2026, 12:28 pm
பூச்சோங் தொழிற்துறை பூங்காவில் பயங்கர தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் நாசமானது
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
September 17, 2026, 12:19 pm
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
September 17, 2026, 12:17 pm
16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் நடைபெறலாம்?: மசீச
September 17, 2026, 12:17 pm
நகைக் கடையில் இரண்டாவது முறையாகக் கொள்ளை: 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது
September 17, 2026, 11:36 am
