செய்திகள் தமிழ் தொடர்புகள்
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
சென்னை:
அன்பில் மகேஸ் வீட்டில் நடைபெறும் சோதனை மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழகம் முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன்பு நடத்தும் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு, ராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை, அயனாவரத்தில் பெண் காவலரிடம் தவெக நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற தவெக அரசு.
இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்.
எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
தொடர் விடுமுறையால் திக்குமுக்காடிய சென்னை சாலைகள், பேருந்துகள்
September 11, 2026, 4:29 pm
பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90
September 10, 2026, 12:11 pm
