நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஶ்ரீ மொஹைதின் வழக்கறிஞர் மீதான காவல் அறிக்கையை எம்ஏசிசி அதிகாரி திரும்பப் பெற்றார்

கோலாலம்பூர்:

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு எதிரான ஜனா விபாவா வழக்கு விசாரணையின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக, அவரது வழக்கறிஞர் மீது எம்ஏசிசி அதிகாரிகள்  போலிஸ் அறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

இன்று மதியம் 12.45 மணிக்கு தனது உதவியாளர் அந்த அறிக்கையைத் திரும்பப் பெற்றதாக எம்ஏசிசி விசாரணை அதிகாரி மசேரி முகமது ஜைனி தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது வழக்கறிஞர் டத்தோ அமர் ஹம்சா அர்ஷாத் எழுப்பிய பிரச்சினைகள் தொடர்பாக இந்தக் காவல் அறிக்கை இருந்தது.

இதில், தொழிலதிபர் ஆடம் ராட்லான் ஆடம் முகமது மற்றொரு வழக்கில் அளித்த வாக்குமூலத்தைப் பதிவு செய்ததும் அடங்கும்.

எம்ஏசிசி தலைமையகத்தில் தான் மேற்கொண்ட ஆய்வின் விளைவாக, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது அல்லது கேள்விக்குரிய ஆவணங்கள் தொடர்பாக ஆணையத்தின் அதிகாரிகளிடமிருந்து எந்தத் தகவலும் கசியவில்லை என்பதைக் கண்டறிந்ததாக 29ஆவது அரசுத் தரப்பு சாட்சி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset