நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்கேசோவின் மாபெரும் i LINDUNG u திருவிழா: செப்டம்பர் 18 முதல் 20 வரை கோத்தா டாமன்சாராவில் நடைபெறுகிறது

கோலாலம்பூர்:

பெர்கேசோ சமூகத்திற்கு உகந்த அணுகுமுறையின் மூலம், தனிநபர், குடும்பம், நிதிப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்துவதற்கான ஒரு தளமாக மெகா ஐ லிண்டுங் யு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

சொக்சோவின் வர்த்தகம், ஊடகம் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் தெங்கு டத்தோ காலிடா தெங்கு பிடின் இதனை கூறினார்.

எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதன் முக்கியத்துவம், குறிப்பாக சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலருக்குச் சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பைப் புரிந்துகொள்ளவோ ​​அல்லது திட்டமிடவோ தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவில்லை.

மெகா ஐ லிண்டுங் யு திருவிழா என்பது, தனிநபர், குடும்பம், நிதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு மிகவும் நிதானமான, மகிழ்ச்சியான சூழலில் கொண்டு வருவதற்கான ஒரு தளமாகும் என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு என்பது வெறும் கொள்கைகள் அல்லது எண்களுடன் தொடர்புடையதாக மட்டும் பார்க்கப்படக்கூடாது.

மாறாக அது தனிநபர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களின் நல்வாழ்வை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு முக்கியமானது என்பதைப் பலர் இன்னும் அறிந்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்ளவோ ​​அல்லது அதற்காகத் திட்டமிடவோ அவர்கள் உண்மையில் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் காண்கிறோம் என்பதே இதற்கான முக்கிய உத்வேகமாகும்.

சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத் திட்டமிடல் தொடர்பான தகவல்களைச் சமூகம் மேலும் விரிவாகப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பையும் இந்த விழா வழங்குகிறது.

பெறப்படும் தகவல்கள் எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் திறந்த மனதுடன் கலந்துகொள்ளுமாறு அவர் ஊக்குவித்தார்.

சமூகப் பாதுகாப்பு குறித்த அறிவை அதிகரிப்பதற்கும், வாழ்க்கை, பணி சார்ந்த அபாயங்களுக்குத் தயாராவதன் முக்கியத்துவம் குறித்த மக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் பெர்கேசோ மேற்கொள்ளும் முயற்சிகளில் மெகா இ லிண்டுங்கு திருவிழாவும் ஒன்றாகும்.

வரும் செப்டம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் டாமன்சாராவில் உள்ள ஸ்ட்ராண்ட் மாலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் எங்களுடன் கலந்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset