செய்திகள் மலேசியா
13 மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பாளர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்
ஆயர் ஹித்தாம்:
பினாங்கு மாநில ஆயர் ஹித்தாமில் 13 மாத குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்திய முறையில் குழந்தையைக் கையாண்டதாக குழந்தை பராமரிப்பாளர் மீது இன்று இங்குள்ள நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும் 44 வயதுடைய நோராய்டா கைருடின் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் ஐயர் இதாம் தாமான் தேசா மவார் பகுதியிலுள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தையின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அவர், சிறுவனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a)இன் கீழ் தன் மீதான குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டு வருகிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இர்வான் சுவைன்போன் இந்த வழக்கின் விசாரணையைக் கையாண்டு வருகிறார்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்க்காக காத்திருக்கும் நிலையில், இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 2:32 pm
மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆசிரியர்: பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை
September 15, 2026, 2:29 pm
கூலிமில் இந்திய பெண்மணி கத்திக்குத்துக்கு இலக்காகி கொலை: கணவருக்கு ஏழு நாட்களுக்கு போலிஸ் தடுப்பு காவல் விதிப்பு
September 15, 2026, 2:10 pm
பெர்கேசோவின் மாபெரும் i LINDUNG u திருவிழா: செப்டம்பர் 18 முதல் 20 வரை கோத்தா டாமன்சாராவில் நடைபெறுகிறது
September 15, 2026, 1:14 pm
ரூ'ராசா வீடுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: அல்-சுல்தான் அப்துல்லா
September 15, 2026, 12:07 pm
கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 15, 2026, 11:19 am
கத்தோலிக்க சமூகத்தை இழிவாக பேசிய அம்னோ தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கோரிக்கை
September 15, 2026, 10:49 am
நஜிப்பின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைப்பு; ஹன்னா இயோவிடம் கேளுங்கள்: அஸாலினா
September 15, 2026, 10:43 am
