நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆசிரியர்: பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை 

ஜார்ஜ்டவுன்: 

பள்ளி மாணவர் ஒருவர் மீது ஆசிரியர் கடுமையாக நடந்து கொண்டதாக வெளியாக தகவலையடுத்து பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை நடத்துவதாக கல்வி இயக்குநர் முஹம்மத் சியாவ்தீன் மாட் சாட் கூறினார். 

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி தண்டனை வழங்குவதற்காக அல்லாமல், விசாரணையின் ஒரு பகுதியாக அவர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாணவரையும் ஆசிரியரையும் தனித்தனியாக பிரித்து வைப்பதோடு, ஆசிரியருக்கு உரிய ஆலோசனை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல எந்தவித அச்சமும் கொள்ளக் கூடாது என்பதே தங்களின் முதன்மைக் நோக்கம் என்றும், இதன் காரணமாகவே ஆசிரியர் தற்காலிகமாக PPDக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் 

முன்னதாக, சீனப்பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர் மீது ஆசிரியர் ஒருவர் கடுமையாக நடந்துகோண்டதாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset