நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை புரிந்த கூரியர் தொழிலாளி: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

கோலா திரெங்கானு: 

12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கூரியர் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் இங்குள்ள கோலா திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

நீதிபதி ஸக்கியூடின் சுல்கிஃப்ளி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார். 

கடந்தாண்டு ஜூன் மாதம் கம்போங் பெங்காலான் செத்தார் எனும் பகுதியில் சந்தேக நபர் 12 வயது சிறுமையைப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது 

2017 சிறார்கள் எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் செக்‌ஷன் 14 ஏ இன் கீழ் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனை விதிக்கப்படும்.

நீதிமன்றம் ஒரு ஜாமீனுடன் RM12,000 ஜாமீன் தொகையை அந்த ஆடவருக்கு நிர்ணயித்தது.
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 12ஆம் தேதிக்கு நீதிமன்றத்தால் மீண்டும் செவிமடுக்கப்படும்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset