செய்திகள் மலேசியா
மாலத்தீவில் முன்மொழியப்பட்ட எண்ணெய் ஆய்வு குறித்து பெட்ரோனாஸுடன் விவாதிக்கப்படும்: பிரதமர்
மாலே:
மலேசியாவின் உலகளாவிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், மாலத்தீவில் எண்ணெய் ஆய்வு மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்த ஒரு முன்மொழிவு பற்றி அந்நிறுவனத்துடன் விவாதிக்கப்படும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
பெட்ரோனாஸின் திறன்கள், சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் அந்நிறுவனத்திற்கு உள்ள விரிவான அனுபவத்தின் மீது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாலத்தீவில் எண்ணெய் ஆய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பெட்ரோனாஸ் ஆராய்வது குறித்த முன்மொழிவு தொடர்பாக, நான் இந்த விஷயத்தை பெட்ரோனாஸுடன் விவாதிக்க வேண்டும்.
மேலும், கனடா முதல் துர்க்மெனிஸ்தான் மற்றும் சூடான் வரையிலும், அத்துடன் சுரினாம், பெரு மற்றும் பிரேசில் வரையிலும் உலகம் முழுவதும் பெட்ரோனாஸின் தற்போதைய பலத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
அதன் சிறகுகளை இங்கு, அதாவது மாலத்தீவிற்கு, விரிவுபடுத்துவது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது என்பது என் கருத்து.
இன்று இங்குள்ள அதிபர் அலுவலகத்தில், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் டத்தோஶ்ரீ அன்வார் இதைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 5:20 pm
டான்ஶ்ரீ மொஹைதின் வழக்கறிஞர் மீதான காவல் அறிக்கையை எம்ஏசிசி அதிகாரி திரும்பப் பெற்றார்
September 15, 2026, 5:06 pm
200 மில்லியன் ரிங்கிட் லஞ்சம், பண மோசடி வழக்குகளிலிருந்து டான்ஶ்ரீ முஹைடின் யாசின் விடுவிக்கப்பட்டார்
September 15, 2026, 4:17 pm
12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை புரிந்த கூரியர் தொழிலாளி: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
September 15, 2026, 2:55 pm
13 மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பாளர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்
September 15, 2026, 2:32 pm
மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆசிரியர்: பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை
September 15, 2026, 2:29 pm
கூலிமில் இந்திய பெண்மணி கத்திக்குத்துக்கு இலக்காகி கொலை: கணவருக்கு ஏழு நாட்களுக்கு போலிஸ் தடுப்பு காவல் விதிப்பு
September 15, 2026, 2:10 pm
