செய்திகள் மலேசியா
200 மில்லியன் ரிங்கிட் லஞ்சம், பண மோசடி வழக்குகளிலிருந்து டான்ஶ்ரீ முஹைடின் யாசின் விடுவிக்கப்பட்டார்
கோலாலம்பூர்:
200 மில்லியன் ரிங்கிட் லஞ்சம், பண மோசடி வழக்குகளிலிருந்து முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹைடின் யாசின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
பெர்சத்து கட்சிக்காக புகாரி இக்யூட்டி
நிறுவனத்திடமிருந்து RM200 மில்லியன் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை மேலும் தொடர வேண்டாம் என்று துணை அரசு தரப்பு வழக்கறிஞர் Datuk Ahmad Akram Gharib நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 254(1)-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த முறையீட்டை உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ருவீனா மாட் நுர்டின் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, முன்னாள் பிரதமரான முஹைடின் யாசினுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த நான்கு முக்கிய குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
பெசத்து கட்சியின் கணக்கிற்காக AmBank மற்றும் CIMB வங்கிகள் வழியாகப் பெறப்பட்டதாகக் கூறப்பட்ட மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
எனினும், ஜனா விபாவா திட்டத்துடன் தொடர்புடைய மற்ற மூன்று நிறுவனங்களிடம் முறைகேடாகப் பணம் பெற்றதாகக் கூறப்படும் மீதமுள்ள வழக்குகளை அவர் தொடர்ந்து எதிர்கொள்ளவுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 5:20 pm
டான்ஶ்ரீ மொஹைதின் வழக்கறிஞர் மீதான காவல் அறிக்கையை எம்ஏசிசி அதிகாரி திரும்பப் பெற்றார்
September 15, 2026, 5:20 pm
மாலத்தீவில் முன்மொழியப்பட்ட எண்ணெய் ஆய்வு குறித்து பெட்ரோனாஸுடன் விவாதிக்கப்படும்: பிரதமர்
September 15, 2026, 4:17 pm
12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை புரிந்த கூரியர் தொழிலாளி: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
September 15, 2026, 2:55 pm
13 மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பாளர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்
September 15, 2026, 2:32 pm
மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆசிரியர்: பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை
September 15, 2026, 2:29 pm
கூலிமில் இந்திய பெண்மணி கத்திக்குத்துக்கு இலக்காகி கொலை: கணவருக்கு ஏழு நாட்களுக்கு போலிஸ் தடுப்பு காவல் விதிப்பு
September 15, 2026, 2:10 pm
