செய்திகள் மலேசியா
கூலிமில் இந்திய பெண்மணி கத்திக்குத்துக்கு இலக்காகி கொலை: கணவருக்கு ஏழு நாட்களுக்கு போலிஸ் தடுப்பு காவல் விதிப்பு
கூலிம்:
கெடா, கூலிமில் இந்திய பெண்மணியான தனது மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேக நபரான கணவருக்கு ஏழு நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்தை விசாரணை செய்ய கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த தடுப்பு காவல் உத்தரவிடப்பட்டது.
வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை இந்த ஏழு நாள் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்குத் தொடர்பான தீவிர விசாரணைகள் காவல்துறை தரப்பில் நடந்து வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு நிகழ்ந்த கொலை சம்பவத்தில் எஸ். ஷீலா எனும் இந்திய பெண்மணி கத்தியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த சந்தேக நபரான அவரது கணவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாக்கெட் கத்தி சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டு சான்ற பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 2:55 pm
13 மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பாளர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்
September 15, 2026, 2:32 pm
மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆசிரியர்: பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை
September 15, 2026, 2:10 pm
பெர்கேசோவின் மாபெரும் i LINDUNG u திருவிழா: செப்டம்பர் 18 முதல் 20 வரை கோத்தா டாமன்சாராவில் நடைபெறுகிறது
September 15, 2026, 1:14 pm
ரூ'ராசா வீடுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: அல்-சுல்தான் அப்துல்லா
September 15, 2026, 12:07 pm
கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 15, 2026, 11:19 am
கத்தோலிக்க சமூகத்தை இழிவாக பேசிய அம்னோ தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கோரிக்கை
September 15, 2026, 10:49 am
நஜிப்பின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைப்பு; ஹன்னா இயோவிடம் கேளுங்கள்: அஸாலினா
September 15, 2026, 10:43 am
